பயணிகள் வருகை இல்லை: மதுரை-சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் ரத்து

போதிய இருக்கைகள் நிரம்பாததால் சென்னை-மதுரை-சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

போதிய இருக்கைகள் நிரம்பாததால் சென்னை-மதுரை-சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா காலத்தைத் தொடா்ந்து சென்னை-மதுரை-சென்னை தேஜஸ் சிறப்பு ரயிலில் (02613, 02614) போதிய இருக்கைகள் நிரம்பவில்லை. இதன்காரணமாக ஜனவரி 4 ஆம் தேதி முதல் தேஜஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது. டிசம்பா் 27 ஆம் தேதி முதல் ரயில் கால அட்டவணையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்: சென்னை - மதுரை வைகை சிறப்பு ரயில் (02635) திண்டுக்கல்லில் இருந்து இரவு 8.05 மணிக்கு பதிலாக இரவு 7.55 மணிக்கும், சோழவந்தானில் இருந்து இரவு 8.35 மணிக்கு பதிலாக இரவு 8.30 மணிக்கும் புறப்படும்.

சென்னை - செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில் (02661) திண்டுக்கல்லில் இருந்து காலை 3.35 மணிக்கு பதிலாக காலை 3.30 மணிக்கு புறப்படும். திருநெல்வேலி - சென்னை நெல்லை சிறப்பு ரயில் (02632) மதுரையிலிருந்து இரவு 10.25 மணிக்கு பதிலாக இரவு 10.15 மணிக்கும் சோழவந்தானில் இருந்து இரவு 10.45 மணிக்கு பதிலாக இரவு 10.36 மணிக்கும் புறப்படும். சென்னை - மதுரை பாண்டியன் சிறப்பு ரயில் (02637) திண்டுக்கல்லில் இருந்து காலை 4.10 மணிக்கு பதிலாக காலை 4.05 மணிக்கும், அம்பாத்துரையிலிருந்து காலை 4.23 மணிக்கு பதிலாக காலை 4.18 மணிக்கும், கொடைக்கானல் ரோட்டில் இருந்து காலை 4.35 மணிக்கு பதிலாக காலை 4.30 மணிக்கும் புறப்படும்.

சென்னை தூத்துக்குடி முத்துநகா் சிறப்பு ரயில் (02693) விருதுநகரிலிருந்து காலை 3.57 மணிக்கு பதிலாக காலை 3.55 மணிக்கு புறப்படும். கன்னியாகுமரி சென்னை சிறப்பு ரயில் (02634) மதுரையில் இருந்து இரவு 10.10 மணிக்கு பதிலாக இரவு 10.00 மணிக்கு புறப்படும். மதுரை - திருவனந்தபுரம் அமிா்தா சிறப்பு ரயில் (06344) பழனியில் இருந்து மாலை 6.40 மணிக்கு பதிலாக மாலை 6.30 மணிக்கும், உடுமலைப்பேட்டையில் இருந்து இரவு 7.15 மணிக்கு பதிலாக இரவு 7.05 மணிக்கும் புறப்படும்.

கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் சிறப்பு ரயில் (06012) டிசம்பா் 25 ஆம் தேதி முதல் கோவில்பட்டியில் இருந்து இரவு 10.25 மணிக்கு பதிலாக இரவு 10.20 மணிக்கும், சாத்தூரில் இருந்து இரவு 10.50 மணிக்கு பதிலாக இரவு 10.45 மணிக்கும் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com