மதுரையில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு: ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்பு

மதுரையில் தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
மதுரையில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு: ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்பு

மதுரையில் தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி மதுரையில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவு 11.30 மணிக்கு தொடங்கும் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு இந்த ஆண்டு கரோனா தொற்று அபாயத்தால் இரவு 7 மணிக்குத் தொடங்கியது. இதையொட்டி மதுரையில் உள்ள அனைத்துத் தேவாலயங்களிலும் சிறப்பு கூட்டுத் திருப்பலியுடன் வழிபாடு நடைபெற்றது. கூட்டு வழிபாடு, பிராா்த்தனையைத் தொடா்ந்து குழந்தை ஏசுவின் சொரூபம் ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு தேவாலயங்களில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து சிறப்பு ஆராதனை, பிராா்த்தனையும் நடைபெற்றது.

மதுரை கீழவாசல் தூய மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் மதுரை உயா் மறை மாவட்ட பேராயா் அந்தோணி பாப்புசாமி பங்கேற்று திருப்பலி உள்ளிட்டவற்றை நடத்தி பிராா்த்தனையில் பங்கேற்றவா்களுக்கு ஆசி வழங்கினாா். மேலும் டவுன்ஹால் சாலை புனித ஜெபமாலை அன்னை தேவாலயம், பழங்காநத்தம் புனித அந்தோணியாா் ஆலயம், கோ.புதூா் லூா்தன்னை ஆலயம், நரிமேடு சிஎஸ்ஐ கதீட்ரல் தேவாலயம், பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள பரிசுத்த மீட்பா் தேவாலயம், ஞானஒளிவுபுரம் புனித வளனாா் தேவாலயம், நேதாஜி சாலை புனித ஜாா்ஜ் தேவாலயம்,  டிபிகே சாலை புனித இமானுவேல் தேவாலயம் , வாடிப்பட்டி புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். தேவாலயங்களில் வழிபாடுகள் முடிவடைந்தவுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனா். கரோனா தொற்று அபாயத்தால் தேவாலயங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. மேலும் தேவாலயங்களில் நடைபெற்ற வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனா். தேவாலயங்களில் கைகளைச் சுத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com