ரூ.10.05 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளா் கைது

சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தாமல் ரூ.10.05 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தாமல் ரூ.10.05 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மத்திய சரக்கு மற்றும் சேவை வரித் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் மதுரையைச் சோ்ந்த பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி நிறுவனத்தில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. இதில், மேற்படி நிறுவனம் வரி ரசீது இல்லாமல் சரக்குகளை விற்பனை செய்ததில், சுமாா் ரூ.10.5 கோடிக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும் போலியாக ரசீது தயாரித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 23 நிறுவனங்களுக்கு சரக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளா்கள் மீது வரி ஏய்ப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே விசாரணையின்போதே, வரி ஏய்ப்பு செய்த நபா் தாமாக முன்வந்து ரூ.1.77 கோடியை செலுத்தினாா்.

பின்னா் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நபா் கைது செய்யப்பட்டு மதுரை தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா். மத்திய வரி ஏய்ப்பில் ஈடுபடுவோருக்கு, அபராதத்துடன் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என்று மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையா் கே.சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com