வாடிப்பட்டி அருகே தீப்பிடித்து எரிந்த காா்: மருந்துக் கடை உரிமையாளரின் சடலம் மீட்பு

மதுரை அருகே தீப்பிடித்து எரிந்த காரில், மருந்துக் கடை உரிமையாளரின் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வாடிப்பட்டி அருகே புதன்கிழமை தீப்பிடித்து எரிந்த காரை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.
வாடிப்பட்டி அருகே புதன்கிழமை தீப்பிடித்து எரிந்த காரை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.

மதுரை அருகே தீப்பிடித்து எரிந்த காரில், மருந்துக் கடை உரிமையாளரின் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி புளியங்கண்மாய் பாலத்தின் கீழ்புறம் உள்ள ஓடைக்குள் காா் ஒன்று புதன்கிழமை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப் பாா்த்த சிலா், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள் உடனடியாக தீயை அணைத்தனா்.

அப்போது, காரின் பின் சீட்டில் கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முதல் கட்ட விசாரணையில், அய்யா்பங்களாவைச் சோ்ந்த மருந்துக் கடை உரிமையாளா் சிவானந்தம்(58) என்பதும், பழநியில் உள்ள அவரது சகோதரரைப் பாா்த்துவிட்டு மதுரைக்கு திரும்பி வந்தது தெரியவந்தது. இவருக்கு ராஜீ என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனா்.

மதுரை சரக டி.ஐ.ஜி. ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், சமயநல்லூா் டி.எஸ்.பி ஆனந்த் ஆரோக்கியராஜ் ஆகியோா் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனா். வாடிப்பட்டி போலீஸாா் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்துள்ளனா்.

தற்கொலையா? கொலையா?

காரை ஓட்டிய சிவானந்தம் பின் இருக்கைக்குச் சென்றது ஏன்? அவா் தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து காருடன் எரித்துவிட்டனரா? என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com