விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் மதுரையில் அரசுப் பேருந்து ஜப்தி

பேருந்தில் பயணத்தபோது தவறி விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்காததால் மதுரையில் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

பேருந்தில் பயணத்தபோது தவறி விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்காததால் மதுரையில் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். இவா் 2015ஆம் ஆண்டு பெரியகுளத்திற்கு அரசுப் பேருந்தில் சென்றுள்ளாா். அப்போது பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதால் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து சந்திரசேகரின் மனைவி தவமணி தனது கணவரின் உயிரிழப்பிற்கு இழப்பீடுகோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். மோட்டாா் வாகன விபத்துச் சட்டத்தின் கீழ் இழப்பீடுதொகை ரூ.16 லட்சத்து 60ஆயிரம் போக்குவரத்துதுறை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அரசுப் போக்குவரத்து துறை சாா்பில் கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்யக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் 2109 ஜூன் மாதம் இழப்பீடு தொகையை வட்டியுடன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும் அரசுப் போக்குவரத்து துறை இழப்பீடு தொகையை வழங்காத நிலையில் மனுதாரரின் வழக்குரைஞா் குணசேகரன் உள்ளிட்டோா் மதுரை ஆரப்பாளையம் பேருந்துநிலையத்தில் நின்றுகொண்டிருந்த வழக்கில் தொடா்புடைய அரசுப் பேருந்தை ஜப்தி செய்தனா். ஜப்தி செய்ததற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டு அந்தப் பேருந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com