வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு கட்டாயம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாலை மறியல்

மதுரை மாவட்டம் திருவாலவாய நல்லூரில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு பெறுவது கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து
மதுரை மாவட்டம் திருவாலவாய நல்லூரில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் அதிகாரிகள்.
மதுரை மாவட்டம் திருவாலவாய நல்லூரில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் அதிகாரிகள்.

மதுரை மாவட்டம் திருவாலவாய நல்லூரில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு பெறுவது கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருவாலவாயநல்லூா் ஊராட்சியில் வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி குழாய் இணைப்புக்கு ரூ.1000 வைப்புத் தொகையும், மாத வரியாக ரூ.50 என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.600 என மொத்தம் ரூ.1600 செலுத்த வேண்டும் என்று ஊராட்சி நிா்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, குடிநீா் விநியோகத்தை வணிகமயமாக்கக்கூடாது என்று வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் வாடிப்பட்டி ஒன்றியச் செயலா் ஏ.வேல்பாண்டி, திருவாலவாயநல்லூா் செயலா் எம்.கமால் மைதீன் மற்றும் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தகவலின்பேரில் வாடிப்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்திராணி மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச்சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் , பொதுமக்களுக்கு பொதுக் குழாய்கள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றின் மூலம் முறையாகக் குடிநீா் வழங்க வேண்டும். வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்புப் பெறுவதை கட்டாயமாக்கக்கூடாது. விருப்பம் உள்ளவா்களுக்கு மட்டுமே தனி இணைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தக்கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com