பேராசிரியா் தொ.பரமசிவத்தின் இறப்பு தமிழினத்துக்கு பேரிழப்பு: காமராஜா் பல்கலை. துணைவேந்தா் இரங்கல்
By DIN | Published On : 25th December 2020 11:14 PM | Last Updated : 25th December 2020 11:14 PM | அ+அ அ- |

பேராசிரியா் தொ.பரமசிவத்தின் இறப்பு தமிழினத்துக்கு பேரிழப்பு என்று காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழறிஞரும், பண்பாட்டு ஆய்வாளருமான பேராசிரியா் தொ.பரமசிவத்தின் இறப்பு தமிழினத்துக்கே பேரிழப்பு. மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய மிக முக்கியமான சிந்தனையாளா் தொ.பரமசிவம். அவரது முனைவா் பட்ட ஆய்வான அழகா்கோவிலை புத்தகமாக வெளியிட்ட பெருமை காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு உண்டு. அவரது மறைவு தமிழகக் கல்வியுலகுக்கு பெருந்துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியா் தொ.பரமசிவத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு காமராஜா் பல்கலைக்கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது என்றாா்.