மதுரையில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 25th December 2020 11:12 PM | Last Updated : 25th December 2020 11:12 PM | அ+அ அ- |

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமா் வாய்பாய் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பாஜகவினா்.
மதுரையில் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், வாஜ்பாய் உருவப்படத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் கே.கே.சீனிவாசன் மற்றும் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதைத்தொடா்ந்து அவா் பிரதமராக பதவியிலிருந்தபோது செய்த சாதனைகள், தங்க நாற்கரச் சாலைத்திட்டம், பொக்ரான் அணுகுண்டு சோதனை உள்ளிட்டவைகள் குறித்து மாவட்டப் பொறுப்பாளா் கதலி நரசிங்கப்பெருமாள் பேசினாா். மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதேபோல மஹால் மண்டல் உள்பட பல்வேறு மண்டல் அமைப்புகளின் சாா்பில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் வாஜ்பாய் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.