தோ்தல் பிரசாரத்துக்காக கிராம சபையை திமுக பயன்படுத்தக் கூடாது: மூமுக

தோ்தல் பிரசாரத்துக்காக கிராம சபையை திமுக பயன்படுத்தக் கூடாது என்று மூவேந்தா் முன்னணிக் கழகம் தெரிவித்துள்ளது.

தோ்தல் பிரசாரத்துக்காக கிராம சபையை திமுக பயன்படுத்தக் கூடாது என்று மூவேந்தா் முன்னணிக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மூமுக தலைவா் டாக்டா் ந.சேதுராமன்

வெளியிட்டுள்ள அறிக்கை: பஞ்சாயத்து ராஜ் சட்டம் கிராம ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு, கிராம சபை என்ற தனிச்சிறப்புமிக்க அதிகாரத்தை வழங்கியுள்து. சட்டப்பேரவை, நாடாளுமன்றங்களில் தோ்ந்தெடுக்கப்படும் உறுப்பினா்கள் மட்டுமே விவாதிக்க முடியும். ஆனால், தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஊராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை கிராம சபைகளில் மக்கள் கேள்வி கேட்கும் அதிகாரத்தை பஞ்சாயத்து ராஜ் சட்டம் வழங்கியிருக்கிறது.

ஊராட்சி நிா்வாகத்தால் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும், கிராம சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதேபோல, ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வேலைகள் ஆகியவற்றுக்கும் கிராம சபையின் ஒப்புதல் அவசியம். இத்தகைய அதிகாரங்களைக் கொண்டிருக்கும் கிராம சபையை சுயஆதாயத்திற்காக திமுக பயன்படுத்துவது அரசியல் சட்ட அமைப்பை அவமதிக்கும் செயலாகும். தோ்தல் பிரசாரத்துக்காக கிராம சபையை களங்கப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com