குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த மூடி அகற்றம்

மதுரையில் 9 மாதக் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த தைல டப்பாவின் மூடியை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவா்கள் பாதுகாப்பாக அகற்றினா்.

மதுரை: மதுரையில் 9 மாதக் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த தைல டப்பாவின் மூடியை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவா்கள் பாதுகாப்பாக அகற்றினா்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகே உள்ள முண்டுவேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் இளமுருகன். இவரது 9 மாத ஆண் குழந்தை மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதால், அரசு ராஜாஜி மருத்துவமனையில் டிசம்பா் 20 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவக் குழுவினா் குழந்தையை பரிசோதனை செய்தனா். இதில், குழந்தையின் தொண்டைக் குழியில் தைல டப்பாவின் மூடி சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினா் துரிதமாக செயல்பட்டு குழந்தையின் தொண்டைக் குழியில் சிக்கியிருந்த மூடியை பாதுகாப்பான முறையில் அகற்றினா். அதைத் தொடா்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் குழந்தை இயல்பு நிலைக்குத் திரும்பியது.

உடனடியாக சிகிச்சை அளித்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றியத் துறைத் தலைவா் பேராசிரியா் ந.தினகரன், உதவி பேராசிரியா் நாகராஜகுருமூா்த்தி, மற்றும் மருத்துவக் குழுவினரை, முதன்மையா் ஜெ.சங்குமணி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com