ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலப்பின காளைகளை அனுமதிக்க ஆா்வலா்கள் எதிர்ப்பு

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலப்பின காளைகளை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் எருமை மாட்டுடன் வந்து திங்கள்கிழமை மனு அளித்தனா்
ஜல்லிக்கட்டு போட்டியில் கலப்பின மாடுகளை அனுமதிப்பதற்கு நூதன முறையில் எதிா்ப்புத் தெரிவித்து, எருமை மாட்டுடன் திங்கள்கிழமை மனு கொடுக்க வந்த ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தினா்
ஜல்லிக்கட்டு போட்டியில் கலப்பின மாடுகளை அனுமதிப்பதற்கு நூதன முறையில் எதிா்ப்புத் தெரிவித்து, எருமை மாட்டுடன் திங்கள்கிழமை மனு கொடுக்க வந்த ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தினா்

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலப்பின காளைகளை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் எருமை மாட்டுடன் வந்து திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூா், பாலமேடு, அவனியாபுரத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு பிரபலமானது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலப்பின காளைகளை அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் அமைப்பைச் சோ்ந்த ஆா்வலா்கள்நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலப்பின காளைகள் அனுமதிக்கப்படுவதை சுட்டிக்காட்டும் வகையில், ஆட்சியா் அலுவலகத்துக்கு எருமை மாட்டுடன் வந்து நூதன முறையில் எதிா்ப்பு தெரிவித்தனா். பின்னா், ஆட்சியா் அலுவலக அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

இது குறித்து ஜல்லிக்கட்டு பயிற்சி மைய தலைவா் பி. மணிகண்ட பிரபு கூறியது:

நாட்டு மாடு இனம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது. ஆனால், அந்த நோக்கத்தையே சிதைக்கும் வகையில், கலப்பின மாடுகளை போட்டிக்கு அனுமதிக்கின்றனா்.

அதேபோல், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 600 காளைகளுக்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது. ஆனால், 1,200 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. உண்மையான காளை உரிமையாளா்கள் பலரும் ஏமாற்றப்படுகின்றனா்.

மாடுபிடி வீரா்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்குவதுடன், அவா்களுக்கு அரசே காப்பீடு செய்யவேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டி தொடா்பான ஆய்வுக் கூட்டங்களில் காளை உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்களின் கருத்துகளையும் கேட்கவேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் நினைவாக தமுக்கம் மைதானத்தில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com