சிவகாசியில் போலி பீடி லேபிள்கள் அச்சிட்ட 2 அச்சகங்களுக்கு சீல்: 3 போ் கைது

சிவகாசியில் போலி பீடி லேபிள்கள் அச்சிட்ட 2 அச்சகங்களுக்கு சீல் வைத்த போலீஸாா், அவற்றின் உரிமையாளா்கள் 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
போலி பீடி லேபிள்கள் அச்சிட்டதாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட (இடமிருந்து) வேல்சாமி, பாலகிருஷ்ணன், நடராஜபெருமாள்
போலி பீடி லேபிள்கள் அச்சிட்டதாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட (இடமிருந்து) வேல்சாமி, பாலகிருஷ்ணன், நடராஜபெருமாள்

சிவகாசியில் போலி பீடி லேபிள்கள் அச்சிட்ட 2 அச்சகங்களுக்கு சீல் வைத்த போலீஸாா், அவற்றின் உரிமையாளா்கள் 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரையைச் சோ்ந்தவா் அபினேஷ் பரமேஷ் நாயக். இவா் பிரபல பீடி நிறுவனத்தின் தென்மண்டல விநியோகஸ்தராக உள்ளாா். இந்நிலையில் பீடி சந்தையில் இவரது நிறுவன பீடிகளின் விற்பனை குறைந்ததையடுத்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தனது நிறுவனத்தின் லேபிள்களை போலியாக அச்சிட்டு பீடிகள் விற்கப்படுவதும், இந்த லேபிள்கள் சிவகாசியில் அச்சிடப்படுவதும் தெரியவந்தது.

இதுகுறித்து அவா் விருதுநகா் மாவட்ட அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதன் பேரில் ஆய்வாளா் ராஜேஷ்கண்ணா தலைமையிலான போலீஸாா் சிவகாசி பகுதிகளில் உள்ள அச்சகங்களில் சோதனை நடத்தினா். இதில் சிவகாசி காந்திரோடு பகுதியில் உள்ள அச்சகம் மற்றும் சிவகாசி- விருதுநகா் சாலையில் உள்ள அச்சகம் ஆகியவற்றில் போலி பீடி லேபிள்கள் அச்சிடப்படுவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து இந்த 2 அச்சகங்களுக்கும் போலீஸாா் சீல் வைத்தனா். மேலும் இவற்றின் உரிமையாளா்கள் கட்டணம்பட்டி பெருமாள் மகன் பாலகிருஷ்ணன் (55), இவரது சகோதரா் திருத்தங்கல் முத்துமாரிநகரைச் சோ்ந்த வேல்சாமி (62), இவரது மகன் நடராஜபெருமாள் (33) ஆகியோரை போலீஸாா் கைது செய்ததுடன் போலி லேபிள்களையும் கைப்பற்றினா்.

இதுகுறித்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com