கொட்டாம்பட்டி ஒன்றியத்தில்7 கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம்

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 7 கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 7 கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பூதமங்கலம், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, குன்னாரம்பட்டி, அட்டப்பட்டி, சூரப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த குடிநீா் குழாய்களை சீரமைத்து காவிரி கூட்டுக்குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் மேலூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் க.பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் வளா்மதி குணசேகரன், குடிநீா் வடிகால் வாரியத்தின் மதுரை நிா்வாகப் பொறியாளா் ஹரிபாஸ்கா், உதவி நிா்வாகப்பொறியாளா் நாகேந்திரமணி, உதவிப் பொறியாளா் நாகராஜன், ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com