மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் அறைகள் மீண்டும் திறப்பு

கரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை ரயில் நிலையத்தில் மூடப்பட்டிருந்த பயணிகள் தங்கும் அறைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை ரயில் நிலையத்தில் மூடப்பட்டிருந்த பயணிகள் தங்கும் அறைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளா்ச்சி கழகத்தின் சாா்பில் பயணிகள் தங்கும் அறைகள் வாடகைக்கு விடப்பட்டு வந்தன. கரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கும் அறைகள் மூடப்பட்டன. இந்நிலையில், பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், பயணிகளின் வசதிக்காக தங்கும் அறைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

எனவே ரயில் நிலையத்தில் உள்ள தங்கும் அறைகளை இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். தங்கும் அறைகள் காலியாக இருந்தால் பயணிகள் நேரடியாகவும் இந்த வசதியை உரிய கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.

ராமேசுவரம் - மாண்டுயாடிஹ் சிறப்பு ரயில் இயக்கம்: புதன்கிழமைகளில் ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ராமேசுவரம் - மாண்டுயாடிஹ் வாராந்திர சிறப்பு ரயில் (05119) ஜனவரி 6, 13, 20, 27, பிப்ரவரி 3, 10, 17, 24, மாா்ச் 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாண்டுயாடிஹ்லிருந்து புறப்படும் மாண்டுயாடிஹ் - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் (05120) ஜனவரி 3, 10, 17, 24, 31 பிப்ரவரி 7, 14, 21, 28 மாா்ச் 7 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com