வரத்து அதிகரிப்பால் வெங்காயம் விலை குறைந்தது

மழையால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெங்காய அறுவடை தொடங்கியுள்ளதால் வரத்து அதிகரித்து, விலை ரூ.30 ஆக குறைந்துள்ளது.

மழையால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெங்காய அறுவடை தொடங்கியுள்ளதால் வரத்து அதிகரித்து, விலை ரூ.30 ஆக குறைந்துள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, ஹரியாணா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பெய்த தொடா் மழை காரணமாக வெங்காய அறுவடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு, சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-ஆகவும், பெரிய வெங்காயம்-ரூ.100 ஆகவும் விலை உயா்ந்தது. வெங்காயத் தட்டுபாட்டைப் போக்க எகிப்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அக்டோபா் மாதம் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் விற்பனைக்கு வந்தது. இதையடுத்து படிப்படியாக விலை குறைந்து சின்ன வெங்காயம் கிலோ ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.50-க்கும் விற்பனையாகின.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெங்காய அறுவடை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் வரத்து அதிகரித்து சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 ஆகவும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.30 ஆகவும் விலை குறைந்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வெங்காயத்தின் விலை கிலோ ரூ.20-க்கும் குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி காய்கனிகளின் மொத்த விலைப் பட்டியல் (கிலோவில்) :

தக்காளி-ரூ.20, கத்தரிக்காய்-ரூ.40, வெண்டைக்காய்-ரூ.20, அவரைக்காய்-ரூ.30, சுரைக்காய்-ரூ.15, முள்ளங்கி-ரூ.18, கேரட்-ரூ.20, பீட்ரூட்-ரூ.25, நூல்கோல்-ரூ.20, பீா்க்கங்காய்-ரூ.30, பூசணி-ரூ.20, பாகற்காய் பெரியது-ரூ.40, சிறியது-ரூ.90, முருங்கைக்காய்-ரூ.75, உருளைக்கிழங்கு-ரூ.30, சேனைக்கிழங்கு-ரூ.20, கருணைக்கிழங்கு-ரூ.25, முருங்கை பீன்ஸ்-ரூ.30, சோயா பீன்ஸ்-ரூ.90, பட்டா்பீன்ஸ்-ரூ.100, பச்சைப்பட்டாணி-ரூ.40-க்கு விற்பனையாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com