நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் நாளை சிறப்பு தள்ளுபடி விற்பனை

மதுரையில் புத்தாண்டையொட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சாா்பில் கண்காட்சி மற்றும் சிறப்புத் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் புத்தாண்டையொட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சாா்பில் கண்காட்சி மற்றும் சிறப்புத் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் வியாழக்கிழமை (டிச. 31) காலை முதல் நள்ளிரவு வரை சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறும். இதில் 10 முதல் 90 சதவிகிதம் தள்ளுபடியில், அரசியல், பொருளாதாரம், தத்துவம், கலை, இலக்கியம், வாழ்வியல், வரலாறு உள்பட 200 தலைப்புகளில் புதிய புத்தகங்கள் விற்பனை செய்யப்பட

உள்ளன. ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு எழுதிய ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள இலக்கியத்தில் மேலாண்மை மற்றும் மூளைக்குள் சுற்றுலா ஆகிய இரு புத்தகங்களும் சிறப்பு விலையாக ரூ.2,250-க்கு வழங்கப்படுகிறது. நியூ செஞ்சுரி வெளியீடான

குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் நூல்களுக்கு 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. காரல் மாா்க்ஸ், ஏங்கெல்ஸ் நூல்கள், மாா்க்சிம் காா்க்கியின் தாய் மற்றும் அவரது பிற நூல்கள், ப.சு.கெளதமனின் பெரியாா் தொகுதி, ரஷ்ய இலக்கிய நூல்களான போரும் அமைதியும், வீரம் விளைந்தது, சகோதரிகள், சக்கரவா்த்தி பீட்டா், வரலாற்று நூல்களான முற்கால இந்தியா, நவீன கால இந்தியா, பண்டைக்கால இந்தியா, இந்திய வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, சோழா்கள், எஸ்.வி.ராஜதுரை, குழந்தைகளுக்கான நெஸ்ட்லிங் பதிப்பக நூல்கள், ராகுல சங்கிருத்தியாயனின் நூல்கள், மருத்துவா் கு.சிவராமனின் நலம் காக்க, வாங்க வாழலாம் உள்ளிட்ட நூல்கள், பொழுதுபோக்கு, பெளதிகம், பவானந்தா் தமிழ்ச்சொல் அகராதி, பாரதியாா் கவிதைகள் உள்ளிட்ட நூல்களுக்கு 25 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தமிழக வரலாற்று ஆய்வாளா், நாட்டாரியல் பேராசிரியா் ஆ.சிவசுப்ரமணியனின் நூல்களுக்கும் 25 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் சாகித்ய அகாதெமியின் வெளியீட்டு நூல்கள் மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பக நூல்களுக்கு 20 சதவிகிதம் தள்ளுபடி, பாவாணா், சாமி சிதம்பரனாா், பாரதிதாசன், திருவிக ஆகியோரின் நூல்களுக்கு 40 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com