பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம்
By DIN | Published On : 30th December 2020 08:20 AM | Last Updated : 30th December 2020 08:20 AM | அ+அ அ- |

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியறுத்தி தமிழ்நாடு அனைத்து துறை தொழிலாளா் ஓய்வூதிய சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவனியாபுரத்தை அடுத்த வில்லாபுரத்தில் அச்சங்கத்தின் 5 ஆவது மாநில மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாநிலப் பொருளாளா் ஜெயச்சந்திரன் நிதிநிலை அறிக்கை வாசித்தாா்.
மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். இக்கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு அங்கன்வாடி, வனத்துறை ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 200 வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டங்களில் பங்கேற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட 32 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...