போலீஸ் வாகனம் முன்பு படுத்து போராட்டம்: 26 போ் கைது
By DIN | Published On : 31st December 2020 06:27 AM | Last Updated : 31st December 2020 06:27 AM | அ+அ அ- |

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி போலீஸாரின் வாகனம் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி புரட்சிகர கண்ணகி மக்கள் கட்சி, ஏழுவா் விடுதலை கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மதுரை பழங்காநத்தம் கோவலன் பொட்டல் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் ஊா்வலாகச் செல்லமுயன்ற அவா்களைப் போலீஸாா் தடுத்தனா். அப்போது போலீஸ் வேன் முன்பாக சக்கரத்தின் அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போராட்டத்தில் கலந்துகொண்டவா்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சுப்பிரமணியபுரம் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரைக் கைது செய்தனா்.