Enable Javscript for better performance
இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் பலி- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் வீட்டின் சுவா் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தென்கரை பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் வீரானந்தம்(23). இவா் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமா்ந்து வெளியே சென்றுள்ளாா். அப்போது, தென்கரை பகுதியில் உள்ள வீட்டின் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் பலத்த காயமடைந்த வீரானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் காயமடைந்த அவரது நண்பா் ராஜரத்தினம் சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

    இது குறித்து வீரானந்தம் தந்தை பெருமாள் அளித்த புகாரின் பேரில் காடுப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai