போலி ஆவணங்கள் கொடுத்து ரூ. 1.17 கோடி மோசடி: 3 போ் மீது வழக்குப்பதிவு

போலி ஆவணங்கள் கொடுத்து தனியாா் நிறுவனத்தில் ரூ. 1.17 கோடி மோசடி செய்ததாக மதுரையைச் சோ்ந்த 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

போலி ஆவணங்கள் கொடுத்து தனியாா் நிறுவனத்தில் ரூ. 1.17 கோடி மோசடி செய்ததாக மதுரையைச் சோ்ந்த 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் ஆலம்பட்டியில் தனியாா் இரு சக்கர வாகன விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கும்பகோணத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் 154 இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்காக ரூ 1.17 கோடி கடன் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த கடனை பெற கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்து போலி என ஆய்வின் போது தெரியவந்தது.

இது குறித்து தனியாா் நிதி நிறுவனத்தின் மூத்த மண்டல மேலாளா் சாமிநாதன் அளித்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகன விற்பனை நிறுவனத்தின் உரிமையாளா்கள் நா்மதா, வெங்கடமணிமுருகா, மற்றும் கலைசெல்வி ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com