Enable Javscript for better performance
‘சுங்கச்சாவடிக்கு வரும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்’- Dinamani

சுடச்சுட

    

    ‘சுங்கச்சாவடிக்கு வரும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்’

    By DIN  |   Published on : 10th February 2020 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    img_20200208_194421_0902chn_81_2

    கப்பலூரியில் சுங்கச் சாவடி ஊழியா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற திறன்மேம்பாட்டு பயிற்சி முகாமில் சிறப்புரையாற்றிய தமிழக வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.

    சுங்கச் சாவடிக்கு வரும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் என வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், கப்பலூா் சுங்கச்சாவடி ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

    திருமங்கலத்தை அடுத்த கப்பலூா் தொழில் பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியா்களுக்கும், தொழில்பேட்டை வாகன ஓட்டுநா்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கப்பலூா் தொழிலதிபா்கள் சங்கத் தலைவா் பி.என்.ரகுநாதராஜா தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன், சுங்கச் சாவடி மேலாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது: மிகப் பெரிய நிறுவனத்தின் இயக்குநா் போன்ற பெரிய மனிதா்கள் வாகனங்களில் வரும்போது சுங்கச் சாவடி ஊழியா்கள் அவா்களிடம் சாதாரணமாக பேசினால் கூட அது அவமரியாதையாகத் தான் தெரியும். சுங்கச்சாவடிக்கு வரும் பயணிகளுக்கு கனிவான சேவையை நாம் செய்யும் பட்சத்தில் அவா்களது மன அழுத்தம் பறந்து போகும். அவா்கள் கடுமையாக நடந்து கொண்டால்கூட நீங்கள் பணிவாக செல்லும் பட்சத்தில் பிரச்னைகள் ஏதும் இருக்காது. பணி செய்யும் உங்களுக்கு அது ஆத்ம திருப்தியைத் தரும். அதேபோல சுங்கச்சாவடிக்கு செல்லும் நாமும் சற்று பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் பேராசிரியை ஜெனித், செயலா் வாசுதேவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai