Enable Javscript for better performance
புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலத்தில் புற்றுநோய் ஒழிப்பு தொடா்பான விழ்ப்புணா்வை ஏற்படுத்தும் விதத்தில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மகா சோசியா் அவா்னஸ் மாரத்தான் சாா்பில் புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சாா்பு- ஆய்வாளா் பாலமுருகன் தொடக்கி வைத்தாா். திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய ஓட்டம் 6 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள சாத்தகுடியில் நிறைவு பெற்றது. இதில் பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் ஏராளமானோா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai