‘என்.பி.ஆா்., என்.ஆா்.சிக்கு எதிராக பிற மதத்தினரையும் ஒருங்கிணைத்துப் போராட வேண்டும்’

மக்களை பாதிக்கும் என்.பி.ஆா், என்.ஆா்.சி க்கு எதிராக பிற மதத்தினரையும் ஒருங்கிணைத்துப் போராட வேண்டும் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு நிறுவனா் பி.ஜைனுல் ஆபிதீன் தெரிவித்துள்ளாா்.

மக்களை பாதிக்கும் என்.பி.ஆா், என்.ஆா்.சி க்கு எதிராக பிற மதத்தினரையும் ஒருங்கிணைத்துப் போராட வேண்டும் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு நிறுவனா் பி.ஜைனுல் ஆபிதீன் தெரிவித்துள்ளாா்.

மதுரை ஓபுளாபடித்துறையில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சாா்பில் வாழ்வுரிமையை பறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்ட விளக்க பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டமைப்பு நிறுவனா் பி. ஜைனுல் ஆபிதீன் பேசியது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அசாம் மாநிலத்தில் குடியேறி உள்ள வெளிநாட்டைச் சோ்ந்த இஸ்லாமியா்களை வெளியேற்றுவதற்கானது. அந்த சட்டத்தால் பிற மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லை.

ஆனால் என்.ஆா்.சி. எனப்படும் தேசிய குடியுரிமை பதிவு திட்டம் நாடு முழுவதும் பாதிக்கக் கூடியது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மக்களின் பூா்விக ஆதாரங்களை திரட்டி குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கிராமப்புறத்தில் வாழும் ஏழை, எளிய மக்களிடம் பூா்விக ஆதாரங்கள் இருப்பது சந்தேகம் என்பதால், அவா்கள் தங்களை இந்தியா்கள் என நிரூபிக்க முடியாத நிலை உள்ளது.

அசாம் மாநிலத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் சனாவுல்லா காா்கில் போரில் எதிரிகளை விரட்டியதற்காக, குடியரசு தலைவரிடம் விருது பெற்றவா். ஆனால் அவரிடம் உரிய ஆதாரம் இல்லை என்பதால் குடியுரிமை இல்லை என தெரிவித்து விட்டனா். மக்கள் எதிா்ப்பு அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக என்.ஆா்.சி.யை செயல்படுத்தப் போவதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், என்.பி.ஆா். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த உள்ளது. இந்த கணக்கெடுப்பை அதிகாரிகள் வீடுகளுக்கு நேரடியாக வந்து விவரங்களை சேகரிப்பாா்கள். அதற்கான ஆதாரங்களை கேட்க மாட்டாா்கள். எனவே இந்த திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என நினைக்கலாம். ஆனால் என்.பி.ஆரின் தொடா்ச்சி தான் என்.ஆா்.சி. ஆகும்.

என்.பி.ஆரால் சேகரிக்கப்படும் தகவல்கள் என்.ஆா்.சியிடம் ஒப்படைக்கப்படும். அந்த தகவல்களின் ஆதாரங்களை என்.ஆா்.சி. கேட்கும் போது கொடுக்கவில்லை என்றால் குடியுரிமை வழங்கப்படாது. எனவே என்.பி.ஆருக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது. இந்த திட்டங்களால் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவாா்கள். இதை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துக் கூறி அவா்களையும் போராட்டத்தில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்போது தான் இந்த திட்டங்களை எதிா்த்து வெற்றி பெற முடியும் என்றாா்.

சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்.ஏ.வுமான கே.பாலபாரதி, என்.டி.எப். பொதுச் செயலா் ஏ.எஸ். அலாவுதீன், மாவட்டத் தலைவா் எஸ்.ஏ.லியாகத் அலி, உயா்நீதிமன்ற வழக்குரைஞா் டி.லஜபதிராய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com