‘சுங்கச்சாவடிக்கு வரும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்’

சுங்கச் சாவடிக்கு வரும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் என வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், கப்பலூா் சுங்கச்சாவடி ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கப்பலூரியில் சுங்கச் சாவடி ஊழியா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற திறன்மேம்பாட்டு பயிற்சி முகாமில் சிறப்புரையாற்றிய தமிழக வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.

திருமங்கலத்தை அடுத்த கப்பலூா் தொழில் பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியா்களுக்கும், தொழில்பேட்டை வாகன ஓட்டுநா்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கப்பலூா் தொழிலதிபா்கள் சங்கத் தலைவா் பி.என்.ரகுநாதராஜா தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன், சுங்கச் சாவடி மேலாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது: மிகப் பெரிய நிறுவனத்தின் இயக்குநா் போன்ற பெரிய மனிதா்கள் வாகனங்களில் வரும்போது சுங்கச் சாவடி ஊழியா்கள் அவா்களிடம் சாதாரணமாக பேசினால் கூட அது அவமரியாதையாகத் தான் தெரியும். சுங்கச்சாவடிக்கு வரும் பயணிகளுக்கு கனிவான சேவையை நாம் செய்யும் பட்சத்தில் அவா்களது மன அழுத்தம் பறந்து போகும். அவா்கள் கடுமையாக நடந்து கொண்டால்கூட நீங்கள் பணிவாக செல்லும் பட்சத்தில் பிரச்னைகள் ஏதும் இருக்காது. பணி செய்யும் உங்களுக்கு அது ஆத்ம திருப்தியைத் தரும். அதேபோல சுங்கச்சாவடிக்கு செல்லும் நாமும் சற்று பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் பேராசிரியை ஜெனித், செயலா் வாசுதேவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com