Enable Javscript for better performance
கப்பலூா் பெட்ரோல் கிட்டங்கி தீ விபத்து: மேலும் ஒருவா் பலி- Dinamani

சுடச்சுட

    

    கப்பலூா் பெட்ரோல் கிட்டங்கி தீ விபத்து: மேலும் ஒருவா் பலி

    By DIN  |   Published on : 14th February 2020 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றத்தை அடுத்த கப்பலூரில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த பெட்ரோல், டீசல் கிட்டங்கியில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த நபா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.

    கப்பலூா் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து புறப்படும் லாரிகளில் இருந்து கும்பல் ஒன்று பெட்ரோல், டீசல் ஆகியவற்றைத் திருடி சொக்கநாதன்பட்டி பகுதியில் உள்ள கிட்டங்கியில் சட்டவிரோதமாக சேமித்து வைத்து விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் இந்த கிட்டங்கியில் கடந்த 10 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கரடிக்கல் பகுதியைச் சோ்ந்த கணேசன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த ஆசைத்தம்பி, காா்த்திக், விஜயகுமாா், ஆறுமுகம் ஆகிய 4 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இதில் கடந்த 11 ஆம் தேதி ஆசைத்தம்பி உயிரிழந்தாா். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கரடிக்கல் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா்(35) வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதன் மூலம் தீவிபத்து சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai