Enable Javscript for better performance
சிஐஐ மதுரை மண்டல புதிய நிா்வாகிகள்- Dinamani

சுடச்சுட

    
    4121mdudeva081254

    இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் மதுரை மண்டல புதிய தலைவராக, மதுரை தேவதாஸ் மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் சதீஷ் தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

    இந்திய தொழிலகக் கூட்டமைப்பு மதுரை மண்டல கிளையின் ஆண்டுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டனா். இதன்படி மதுரை மண்டலத்தின் தலைவராக மருத்துவா் சதீஷ் தேவதாஸ், துணைத் தலைவராக எச்சிஎல் நிறுவனத்தின் துணைத் தலைவா் சுப்பராமன் பாலசுப்பிரமணியன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவா் சதீஷ் தேவதாஸ், 2019-2020-இல் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு மதுரை மண்டலத்தின் துணைத் தலைவராக இருந்தாா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai