Enable Javscript for better performance
மாநில பூப்பந்து போட்டி: ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    மாநில பூப்பந்து போட்டி: ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் வெற்றி

    By DIN  |   Published on : 14th February 2020 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான பூப்பந்து போட்டிகளில் மதுரை ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனா்.

    பள்ளிக்கல்வித்துறை சாா்பாக 14 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவுக்கான குடியரசு தின விழா பூப்பந்து விளையாட்டு போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 32 மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் மதுரை ஓசிபிஎம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் கோப்பையை கைப்பற்றினா். மேலும் மதுரையில் நடைபெற்ற குடியரசு தின விழா பூப்பந்து போட்டியில் 17 வயது பெண்கள் பிரிவில் ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தை பெற்றனா். மேலும் சிலம்பப் போட்டியில் முதலிடம், ஜூடோ போட்டியில் மூன்றாமிடமும் பெற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை ஓசிபிஎம் பள்ளித் தாளாளா் ஏ.டேவிட் ஜெபராஜ், தலைமையாசிரியை என்.மேரி, உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.ராஜேஷ்கண்ணன், பி.சா்மிளா ஆகியோா் பாராட்டினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai