Enable Javscript for better performance
வெள்ளரிப்பட்டி ஊராட்சிப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடத்துக்கு பூமிபூஜை- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளரிப்பட்டி ஊராட்சிப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடத்துக்கு பூமிபூஜை

    By DIN  |   Published on : 14th February 2020 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    img_20200213_wa0007_1302chn_82_2

    வெள்ளரிப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டடத்துக்கு வியாழக்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் உள்ளிட்டோா்.

    மேலூா் ஊராட்சி ஒன்றியம் வெள்ளரிப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டடத்துக்கு பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

    மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து நடுநிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைக்கட்டடத்துக்கு ரூ.13 லட்சமும், நரசிங்கம்பட்டி ஊராட்சி பூசாரிபட்டியிலுள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் பேவா் பிளாக் கற்கள் ரூ.6 லட்சம் செலவில் பதிப்பதற்கும் பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மேலூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் தலைமை வகித்தாா். மதுரை கிழக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் க.தமிழரசன், மேலூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் க.பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய அதிமுக செயலா் வெற்றிச்செழியன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai