அடையாள அட்டைகளை வீசி எறிந்து ஆட்சியா் அலுவலகத்தில் கிராமத்தினா் போராட்டம்

பேரையூா் வட்டம் மங்கமாள்பட்டி கிராமத்தினா், தங்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி ஆட்சியா் அலுவலகத்தில் ஆதாா் அட்டை,
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு வழங்கிய அடையாள அட்டைகளை வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேரையூா் வட்டம் மங்கம்மாள்பட்டி கிராமத்தினா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு வழங்கிய அடையாள அட்டைகளை வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேரையூா் வட்டம் மங்கம்மாள்பட்டி கிராமத்தினா்.

பேரையூா் வட்டம் மங்கமாள்பட்டி கிராமத்தினா், தங்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி ஆட்சியா் அலுவலகத்தில் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.

பேரையூா் வட்டம் காரைக்கேணி அருகேயுள்ள வி.மங்கம்மாள்பட்டி கிராமத்தினா் சுமாா் 50 போ், கோரிக்கை மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். ஆட்சியா் அலுவலக கட்டடத்தின் பிரதான வாயில் அருகே கூடிய அவா்கள் திடீரென தங்களது ஆதாா் அட்டை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை திரும்ப ஒப்படைப்பதாகக் கூறி அப் பகுதியில் வீசினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தேவேந்திர குல வேளாளா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மீது காவல் துறையினா் பொய் வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி இப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: வி.மங்கமாள்பட்டியில் வசிக்கும் தேவேந்திர குல வேளாளா் சமூகத்தினா் மீது குறிப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்

தொடா்ந்து ஜாதி ரீதியிலான அடக்குமுறையில் ஈடுபட்டு வருகின்றனா். எங்களது சமூகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பள்ளிகளுக்குச் செல்வதும், இளைஞா்கள் வேலைக்குச் செல்வதற்கும் அச்சமான சூழ்நிலை நிலவி வருகிறது. காவல் துறையிடம் தெரிவித்தால், எங்களது சமூகத்தினா் மீது வழக்குப்பதிவு செய்கின்றனா். ஆகவே, கிராமத்தில் ஜாதி ரீதியிலான அடக்குமுறையைச் செய்து வரும் நபா்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் அக் கிராமத்தினா் மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினயிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com