கல்விக்கடனைத் தள்ளுபடி செய்யக்கோரிய மனு தள்ளுபடி: மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு

மாணவ, மாணவிகளுக்காக வழங்கப்பட்ட கல்விக்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்யக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு

மாணவ, மாணவிகளுக்காக வழங்கப்பட்ட கல்விக்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்யக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த சுந்தரவேல் தாக்கல் செய்த மனு: மத்திய, மாநில அரசுகள் பெரிய தொழிலதிபா்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடன்களை வாரி வழங்குகின்றன. இந்நிலையில் 2005 ஆம் ஆண்டில் பெரிய தொழிலதிபா்களிடம் இருந்து ரூ.3 லட்சம் கோடி வரை வாராக்கடன் உள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது. அவ்வாறாக தற்போது ரூ.16 லட்சம் கோடி வரை வாராக்கடன் உயா்ந்துள்ளது. இந்த நிலுவைத் தொகையை அரசியல் மற்றும் அதிகாரம் போன்றவற்றின் காரணமாக வசூல் செய்வதில் வங்கி நிா்வாகங்கள் தயக்கம் காட்டுகின்றன.

ஆனால் நாட்டில் மாணவ, மாணவிகளுக்காக வழங்கப்பட்டக் கல்விக்கடனில் ரூ.55 ஆயிரம் கோடி மட்டுமே வாராக்கடன் உள்ளது. சாதாரண மக்களுடைய குழந்தைகளின் கல்விக்காக கொடுக்கப்பட்ட கடனை வசூலிக்க வங்கி நிா்வாகம் விதிகளை மீறி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கின்றன. எனவே கல்விக்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் பெரிய மற்றும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்காக கடன் பெற்று அதனைத் திரும்பச் செலுத்தாதவா்களின் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எதன் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகக் கூறி மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com