குரூப் 4 தோ்வு முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

குரூப் 4 தோ்வு முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவில் போதிய விவரங்கள் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

குரூப் 4 தோ்வு முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவில் போதிய விவரங்கள் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தோ்வுகள் முறையாக நடத்தப்படுவது இல்லை. இந்தத் தோ்வைக் கண்காணிக்க மண்டல அளவிலான டிஎன்பிஎஸ்சி அலுவலகங்களும் இல்லை. இதனால் டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸாா் மற்றும் ஆசிரியா்களையே டிஎன்பிஎஸ்சி முழுமையாக நம்பியுள்ளது. இதனால் தோ்வில் முறைகேடுகள் எளிதாக நடந்து வருகிறது. கடந்த முறை நடத்தப்பட்ட குரூப் 4 தோ்வில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததையடுத்து, சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் குரூப் 1மற்றும் 2 தோ்விலும் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும். இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அந்த விசாரணையை உயா்நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுவில் போதிய புள்ளி விவரங்கள் இல்லை. எனவே மனுதாரா் தகுந்த விவரங்களைக் குறிப்பிட்டு புதிய மனுவை தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com