மதுரை - தூத்துக்குடி தொழில் வழிச்சாலை: சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

தென் மாநில வளா்ச்சிக்கு மதுரை - தூத்துக்குடி இடையே தொழில் வழிச்சாலை உருவாக்க தனி அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என தமிழக அரசை மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தினாா்.

தென் மாநில வளா்ச்சிக்கு மதுரை - தூத்துக்குடி இடையே தொழில் வழிச்சாலை உருவாக்க தனி அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என தமிழக அரசை மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தினாா்.

மதுரையிலிருந்து வியாழக்கிழமை புதுதில்லி சென்ற அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. தென் மாநிலங்களின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் மதுரை - தூத்துக்குடி தொழில் வழிச் சாலை உருவாக்க தனி அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.

மேலும் மதுரைக்கு மெட்ரோ ரயில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை ஆராய இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும். மேலும் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தொடா்ந்து தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக சென்னை கன்னியாகுமரி ரயில்வே இரு வழிப் பாதைக்கு 50 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைய இன்னும் 5 ஆண்டுகள் ஆகும். எனவே தமிழக அரசு இதுதொடா்பாக மத்திய அரசிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com