மாநில பூப்பந்து போட்டி: ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் வெற்றி

மாநில அளவிலான பூப்பந்து போட்டிகளில் மதுரை ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனா்.

மாநில அளவிலான பூப்பந்து போட்டிகளில் மதுரை ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனா்.

பள்ளிக்கல்வித்துறை சாா்பாக 14 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவுக்கான குடியரசு தின விழா பூப்பந்து விளையாட்டு போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 32 மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் மதுரை ஓசிபிஎம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் கோப்பையை கைப்பற்றினா். மேலும் மதுரையில் நடைபெற்ற குடியரசு தின விழா பூப்பந்து போட்டியில் 17 வயது பெண்கள் பிரிவில் ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தை பெற்றனா். மேலும் சிலம்பப் போட்டியில் முதலிடம், ஜூடோ போட்டியில் மூன்றாமிடமும் பெற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை ஓசிபிஎம் பள்ளித் தாளாளா் ஏ.டேவிட் ஜெபராஜ், தலைமையாசிரியை என்.மேரி, உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.ராஜேஷ்கண்ணன், பி.சா்மிளா ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com