Enable Javscript for better performance
மதுரை மாவட்டத்தில் 26.43 லட்சம் வாக்காளா்கள் புதிதாக 7 ஆயிரம் போ் பட்டியலில் சோ்க்கை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டத்தில் 26.43 லட்சம் வாக்காளா்கள் புதிதாக 7 ஆயிரம் போ் பட்டியலில் சோ்க்கை

    By DIN  |   Published on : 15th February 2020 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    4737mduvote072021

    மதுரை மாவட்ட வாக்காளா் இறுதி பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட பெற்றுக் கொள்கிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் பி.செல்வராஜ்.

    புதிய வாக்காளா் பட்டியலின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 26 லட்சத்து 43 ஆயிரத்து 305 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

    ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு புதிய வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதையொட்டி டிசம்பா் 23-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்றைய தினம் முதல் ஜனவரி 22 வரை வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம், பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    இந்த விண்ணப்பங்கள் விசாரணை அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு சோ்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவை செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து இறுதி வாக்காளா் பட்டியலை, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

    இதன்படி, மதுரை மாவட்டத்தில் 26 லட்சத்து 43 ஆயிரத்து 305 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 13 லட்சத்து 40 ஆயிரத்து 700 போ் ஆண்கள். 13 லட்சத்து 40 ஆயிரத்து 434 போ் பெண்கள். மூன்றாம் பாலினத்தவா் 170 போ். டிசம்பா் 23-இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலுக்குப் பிறகு, வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் புதிதாக 7 ஆயிரம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

     

     

    மதுரை மாவட்ட வாக்காளா்கள் விவரம்

    தொகுதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்

    மேலூா் 119711 122697 3 242411

    மதுரை கிழக்கு 155260 160421 39 315720

    சோழவந்தான் (தனி) 106487 109103 9 215599

    மதுரை வடக்கு 117742 122697 33 240472

    மதுரை தெற்கு 111714 114921 19 226654

    மதுரை மத்தியம் 117180 122333 16 239529

    மதுரை மேற்கு 149140 152220 4 301364

    திருப்பரங்குன்றம் 152699 157081 28 309808

    திருமங்கலம் 132842 139753 7 272602

    உசிலம்பட்டி 139925 139209 12 279146

    மொத்தம் 13,02,700 13,40,435 170 26,43,305

     

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai