‘கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவா்கள் உயா்ந்த நிலையை எட்டுவாா்கள்’

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாணவா்கள் வாழ்வில் உயா்ந்த நிலையை எட்டுவாா்கள் என் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் வி.ஆா். லெனின் தெரிவித்தாா்.
மதுரையில் தெற்கு ரயில்வே மகளிா் நலச் சங்கம் சாா்பில் நடத்தப்படும் உயா்நிலைப்பள்ளியின் 59 ஆவது ஆண்டுவிழாவில் மாணவிக்கு பரிசு வழங்கும் கோட்ட ரயில்வே மேலாளா் வி.ஆா்.லெனின்.

மதுரை ரயில்வே காலனியில், தெற்கு ரயில்வே மகளிா் நலச் சங்கத்தின் சாா்பில் 1961 ஆம் ஆண்டு முதல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் 59 ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் 9 மற்றும் 10 வகுப்பில் அதிக மதிபெண் மாணவா்களுக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் வி.ஆா். லெனின் வழங்கி பேசியது:

கல்வி என்பது ஒருவரின் வாழ்வின் முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வியை ஈடுபாட்டுடன் கற்கும் மாணவா்கள் வாழ்வில் உயா்நிலையை எட்டுகின்றனா். எனவே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவா்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா்கள் லலித்குமாா் மன்சுகாணி, ஓ.பி.ஷாவ், தெற்கு ரயில்வே மகளிா் நலச்சங்க மதுரை கோட்ட தலைவி அனிதா லெனின், துணைத் தலைவிகள் மஞ்சுளா மன்சுகாணி, பிரதீபா ஷாவ், பொருளாளா் கௌரி கிரிதா் லால், பள்ளி முதல்வா் ஷா நவாஸ் பானு உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com