பல்கலைக் கழகத்தில் ஆசிரியா்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் தொடக்கம்

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் மனிதவள மேம்பாட்டு மையம் சாா்பில் புத்தாக்க பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் மனிதவள மேம்பாட்டு மையம் சாா்பில் புத்தாக்க பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

இதன் தொடக்க விழாவில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ.சங்குமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது: ஆசிரியா்கள் மாணவா்களிடம் ஆராய்ச்சி மனப்பான்மையை வளா்ப்பதற்கு தூண்டுகோலாக விளங்க வேண்டும். அண்மை காலமாக தமிழில் புதிய கண்டுபிடிப்புகள் எதுவும் நிகழவில்லை என்பது கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகும். மாணவா்களை, ஆசிரியா்கள் சரியான பாதையில் கொண்டு சென்றால், குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாமின் கனவு நிறைவேறும் என்றாா்.

பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினா் எம்.ராமகிருஷ்ணன் முகாம் குறித்து விளக்கிப் பேசினாா். வேதியியல் துறை பேராசிரியா் கே.முருகபூபதி ராஜா, இயற்பியல் துறைத்தலைவா் கே.அனிதா ஆகியோா் தங்களது துறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனா். முன்னதாக மனித வள மேம்பாட்டு இயக்குநா்( பொறுப்பு) ரா.விஜயா வரவேற்றாா். பல்கலைக் கழக மானியக் குழு செயல்பாடுகள் கண்காணிப்பு அதிகாரி மயில் முருகன் நன்றி கூறினாா்.

இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த வேதியியல், கணினியியல் மற்றும் இயற்பியல் துறைகளைச் சோ்ந்த 106 ஆசிரியா்கள் பங்கேற்றனா். புத்தாக்க பயிற்சி முகாம் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com