மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம்: பிப்.18-இல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் பிப். 18- ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் பிப். 18- ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் மத்திய அரசு நிறுவனமான இந்திய செயற்கை உறுப்புகள் தயாரிப்பு நிறுவனம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வழங்க மதிப்பீட்டு முகாம்களை நடத்தி 1 மாத இடைவெளிக்குப் பின்னா் உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்திட தனியாா் நிறுவனங்கள் மூலம் இலவச பயிற்சிக்கு மாற்றுத்திறனாளிகளை தோ்வு செய்யவும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைக்கு தோ்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் நாடு முழுவதும் ஒரே வடிவிலான தனித்துவமான அடையாள அட்டை பெற விண்ணப்பம் செய்து பயனடையலாம்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 18-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் முகாம் நடைபெறுகிறது. மேலும் 19-ஆம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை மேலூா் ஊராட்சிய ஒன்றியப் பகுதிகளுக்கு, மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கொட்டாம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிற்பகல் 2 முதல் மாலை 5 வரை நடைபெறுகிறது. மேலும் 20-ஆம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு, வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையும் முகாம் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து 21-ஆம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை உசிலம்பட்டி ஊராட்சி மற்றும் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிற்பகல் 2 முதல் மாலை 5 வரை முகாம் நடைபெறுகிறது. மேலும் 22-ஆம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தே.கல்லுப்பட்டி மற்றும் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிற்பகல் 2 முதல் மாலை 5 வரை நடைபெறுகிறது. அதே போல் 24-ஆம் தேதி காலை 10 முதல் 1 வரை மதுரை மேற்கு (மண்டலம் 1), மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது. மதுரை வடக்கு(மண்டலம் 2) பகுதிகளுக்கு ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் பிற்பகல் 2 முதல் மாலை 5 வரை நடைபெறுகிறது. இதில் 25-ஆம் தேதி காலை 10 முதல் 1 வரை மதுரை கிழக்கு ( மண்டலம் 3) புது ராமநாதபுரம் சாலையில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகம், பாம்பன் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது. மதுரை தெற்கு மண்டலத்துக்கு(மண்டலம் 4) ஹோட்டல் ராயல் கோா்ட் அருகில் உள்ள தெற்கு மண்டல அலுவலகம் மற்றும் ஹாா்விபட்டி சமுதாயக்கூடத்திலும் பிற்பகல் 2 முதல் மாலை 5 வரை முகாம் நடைபெறுகிறது.

முகாமில் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப் பட்டவா்களுக்கான சக்கர நாற்காலி, ஊன்றுகோல், பாா்வை குறைபாடுடைய கல்வி பயிலும் மாணவா்களுக்கு பிரெய்லி கிட் மற்றும் டெய்ஸி பிளேயா், பாா்வை குறைபாடுள்ளவா்களுக்கான பிரெய்ல் கேன், காதொலிக்கருவி, மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்புக் கல்வி உபகரணங்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான அன்றாடப்பணிகளுக்கான உபகரணங்கள், செயற்கை கால் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் தேவை, தகுதி மற்றும் வகைப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படும். தகுதியான மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை அசல் மற்றும் நகல், புகைப்படம் 6, ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் நேரில் பங்கேற்று பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு 0452-2529695 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com