பொங்கல் பண்டிகை: ராமேசுவரம்-ஹைதராபாத் இடையே சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமேசுவரம் - ஹைதராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமேசுவரம் - ஹைதராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

ராமேசுவரம் - ஹைதராபாத் (வண்டி எண் 07686) சிறப்பு கட்டண ரயில் ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். இந்த ரயில் 2020 ஜனவரி 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) ராமேசுவரத்தில் இருந்து புறப்படும். மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா் கண்டோன்மெண்ட், காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, குண்டூா், மிரிலகுட, நல்கொண்டா மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மதுரை கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com