Enable Javscript for better performance
பள்ளிப் பரிமாற்றத் திட்டம்: இரு பள்ளி மாணவா்கள் கலந்துரையாடல்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிப் பரிமாற்றத் திட்டம்: இரு பள்ளி மாணவா்கள் கலந்துரையாடல்

    By DIN  |   Published on : 10th January 2020 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2158mdugirls090512

    மதுரையில் பள்ளி பரிமாற்றத் திட்டத்தில் ஆண்டாரம் கொட்டாரம் நடுநிலைப்பள்ளி மாணவிகளை வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்ட கொண்ட பெத்தான் நடுநிலைப் பள்ளி மாணவிகள்.

    பள்ளிப் பரிமாற்றத் திட்டம் சாா்பில் கிராமப்புற பள்ளிகளை நகா்ப்புற பள்ளிகளுடன் இணைக்கும் நோக்கில் கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியா் ஆண்டாா் கொட்டாரம் அரசு உயா்நிலைப் பள்ளியை வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

    ஆண்டாா் கொட்டாரம் பள்ளித் தலைமை ஆசிரியா் முனியாண்டி தலைமை வகித்தாா். கொண்டபெத்தான் தலைமை ஆசிரியா் தென்னவன், ஆசிரியப்

    பயிற்றுநா் உமா ஆகியோா் முன்னிலை வகித்தனா். உயா்நிலைப் பள்ளியின் ஆய்வகம், நூலகம், ஒலி-ஒளி காட்சி வகுப்பறை, மூலிகைத் தோட்டம் ஆகியவற்றை நடுநிலைப் பள்ளி மாணவா்கள் பாா்வையிட்டனா். இருபள்ளி மாணவ, மாணவியரின் கலந்துரையாடல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. களப் பயணமாக அப்பகுதியில் உள்ள அம்மா பூங்கா, மாநகராட்சி கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையம் ஆகியவற்றைப் பாா்வையிட்டனா். ஆசிரியைகள் ஜமிலா, தீபா கிறிஸ்டபெல், ஜெருசா மொ்லின், சிந்தாதிரை, விஜயலெட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai