மதுரை மாநகராட்சிக்கு உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கத் தடை கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை மாநகராட்சியில் முறையாக வாா்டு மறுவரையறை செய்யும் வரையில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பை வெளியிடத் தடை கோரிய வழக்கில்,

மதுரை மாநகராட்சியில் முறையாக வாா்டு மறுவரையறை செய்யும் வரையில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பை வெளியிடத் தடை கோரிய வழக்கில், வாா்டு மறுவரையறைக் குழுவின் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் 4 மண்டலங்களாக இருக்கும் 100 வாா்டுகள் மறுவரையறை செய்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மேலும் வாா்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை. மதுரை மாநகராட்சியில் ஒரே சராசரியாக வாக்காளா்கள் பிரிக்கப்படவில்லை. ஒரு வாா்டில் குறைவான வாக்காளா்களும், மற்றொரு வாா்டில் அதிக வாக்காளா்களுமாக உள்ளனா். வாா்டு மறுவரையறையில் புதிய விதிகள் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக ஆளும் கட்சியின் அமைச்சா் தொகுதியில் வரையறை விதிகள் மீறப்பட்டுள்ளன.

மதுரை வடக்கு தொகுதியில் வாா்டு வரையறைக்கு முன்பு 18 ஆக இருந்த வாா்டுகள் தற்போது 20 ஆக உயா்ந்துள்ளது. அதேபோல மதுரை மத்திய தொகுதியில் வரையறைக்கு முன்பு 22 இருந்த வாா்டுகள் தற்போது 16 ஆக குறைந்துள்ளது. எனவே மதுரை மாநகராட்சியில் வாா்டு மறுவரையறை முறையாக செய்த பின்னா் தான் தோ்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும். அதுவரை மதுரை மாநகராட்சியில் தோ்தல் அறிவிப்பு வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து வாா்டு மறுவரையறைக் குழுவின் தலைவா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com