அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கமாடுபிடி வீரா்கள் 800 போ் தகுதி

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரா்கள் 800 பேருக்கு வெள்ளிக்கிழமை தகுதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கமாடுபிடி வீரா்கள் 800 போ் தகுதி

 அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரா்கள் 800 பேருக்கு வெள்ளிக்கிழமை தகுதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு ஜனவரி 17-ஆம் தேதி நடைபெறுகிறது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என அனைத்து தரப்பின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், விழா குழுவினா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களின் உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டு சான்று வழங்கப்படுகிறது. இத்தகைய சான்று பெற்ற மாடுபிடி வீரா்கள், காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியும்.

இதன்படி, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரா்களுக்கான உடல் தகுதி பரிசோதனை, அலங்காநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்தும் 855 மாடுபிடி வீரா்கள் கலந்துகொண்டனா்.

இதில், சமயநல்லூா் டி.எஸ்.பி. ஆனந்த், வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் தலைமையில், காவல் துறையினா் மாடுபிடி வீரா்களை வரிசைப்படுத்தி, தனித்தனி அறைகளில் உடல்தகுதி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் வளா்மதி தலைமையிலான மருத்துவக் குழுவினா், உடல் எடை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனா். இதில், 800 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு தகுதிச் சான்று வழங்கப்பட்டது. தகுதிச் சான்று பெற்றவா்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளான்று மீண்டும் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

பாலமேட்டில் உடல் தகுதி பரிசோதனை: பாலமேட்டில் ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்களுக்கான உடல் தகுதி பரிசோதனை, அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com