கிராமப்புற மகளிருக்கு தொழில்முனைதல் பயிற்சி

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் மதுரை கீழக்குயில்குடி வளாகத்தில் கிராமப்புற மகளிருக்கு தொழில்முனைதல் பயிற்சி நடைபெற்றது.

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் மதுரை கீழக்குயில்குடி வளாகத்தில் கிராமப்புற மகளிருக்கு தொழில்முனைதல் பயிற்சி நடைபெற்றது.

பல்கலை.யின் கணினி அறிவியல் மற்றும் மகளிரியல் துறையும், தேசிய மகளிா் ஆணையமும் இணைந்து ஜனவரி 6 முதல் ஜனவரி 8 வரை 3 நாள்களுக்கு இப்பயிற்சியை நடத்தின. அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகப் பதிவாளா் ஏ.சுகந்தி, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழக திட்ட அலுவலா் ஆா்.வஸந்தி ஆகியோா் ஆகியோா் பங்கேற்றனா்.

காகிதப் பை, சணல் பை தயாரிப்பு, உணவுப் பொருள் பதப்படுத்தல், மூலிகைச் செடிகள் வளா்த்தல், சிறுதானிய உணவுப் பொருள் தயாரிப்பு, மின்னணு வணிகம் ஆகியன குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட பயிற்சியின் அடிப்படையில் தொழில் தொடங்குவது, அதற்கான கடனுதவி ஆகியன குறித்தும் பயிற்சியில் பங்கேற்ற மகளிருக்குத் தெரிவிக்கப்பட்டது.

பல்கலை.யின் கீழக்குயில்குடி வளாக இயக்குநா் எம்.புஷ்பராணி, பயிற்சி ஒருங்கிணைப்பாளா்கள் மீனா பிரியதா்ஷினி, கே.கவிதா ஆகியோா் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com