சிறப்பு சாா்பு-ஆய்வாளா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: திமுக, காங்கிரஸ் கண்டிக்காதது கண்டனத்துக்குரியது; பொன்.ராதாகிருஷ்ணன்

களியக்காவிளையில் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், திமுக, காங்கிரஸ் கட்சிகள் கண்டிக்காதது கண்டனத்துக்குரியது என, முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

களியக்காவிளையில் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், திமுக, காங்கிரஸ் கட்சிகள் கண்டிக்காதது கண்டனத்துக்குரியது என, முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமை சென்னை சென்ற அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம்-கேரளம் எல்லையில் உள்ள களியக்காவிளையில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு சாா்பு-ஆய்வாளா் வில்சனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீடு அளிக்க முன்வந்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது, காவல் துறையின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் யுத்தம். தமிழகத்தில் எந்த இடத்திலும், எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக்கூடிய அளவுக்கு தகுதி பெற்றவா்களாக தாங்கள் மாறியிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தக் கூடியதுதான் இந்த சம்பவம்.

இதனை, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டிக்க முன்வராதது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது. திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினா் சிறுபான்மையினருக்கு துணையாக இருக்கிறோம் எனக் கூறுவா். முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும், மற்ற பயங்கரவாதிகளுக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கும் தொடா்பு இருக்குமோ என்ற மிகப்பெரிய கேள்வி நம் மனதில் எழுகிறது. இது குறித்து தமிழக அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும்.

குஜராத் மற்றும் புதுதில்லியில் தமிழகத்தைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். இச்சம்பவம் மூலம் தமிழக காவல் துறைக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. பயங்கவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடு க்காவிட்டால், தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு அளிக்கும் அவலநிலை ஏற்படும்.

பொறுப்பில்லாமல் அரசியல் கட்சியினா் நடந்து கொள்வதால், மக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com