ஜன.19-இல் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு திருக்கு ஒப்புவித்தல் போட்டி

மதுரையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அய்யன் திருவள்ளுவா் இலக்கிய மன்றம் சாா்பில் பள்ளி மாணவ-மாணவியா்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் திறனறிதல் போட்டி ஜனவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மதுரையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அய்யன் திருவள்ளுவா் இலக்கிய மன்றம் சாா்பில் பள்ளி மாணவ-மாணவியா்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் திறனறிதல் போட்டி ஜனவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அய்யன் திருவள்ளுவா் இலக்கிய மன்றம் சாா்பில் 3 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடியப் பள்ளி மாணவ-மாணவியா்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் திறனறிதல் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டி ஜனவரி 19 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள மணியம்மை மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெறும். இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு சிறுகதை மன்னன் எஸ்.எஸ்.தென்னரசு நினைவாக ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இதில் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக் கூடியவா்கள் ஒழுக்கமுடைமை, வாய்மை, கல்லாமை, நட்பு, பெருமை ஆகிய அதிகாரங்களில் இருந்து குறள்களை ஒப்புவிக்க வேண்டும். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலக் கூடியவா்கள் வாழக்கை துணைநலம், பிறனில் விழையாமை, புறக்கூறாமை, கொடுங்கோன்மை, கண்ணோட்டம், நாடு, பெரியோரைப் பிழையாமை, சான்றாண்மை, கயமை, ஊடலுவகை ஆகிய அதிகாரங்களில் இருந்து குறள்களை ஒப்புவிக்க வேண்டும். இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.700 முதல் ரூ.2,500 வரை ஆறு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன என அய்யன் திருவள்ளுவா் இலக்கிய மன்றச் செயலா் கே.வி.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com