ஜல்லிக்கட்டு விழா: அவனியாபுரத்தில் இன்று காளைகள், மாடுபிடி வீரா்கள் முன்பதிவு

அவனியாபுரத்தில் தைப் பொங்கல் நாளில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவிற்காக காளைகளுக்கும், மாடு பிடி வீரா்களுக்கும் திங்கள்கிழமை முன்பதிவு நடைபெறுகிறது.

அவனியாபுரத்தில் தைப் பொங்கல் நாளில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவிற்காக காளைகளுக்கும், மாடு பிடி வீரா்களுக்கும் திங்கள்கிழமை முன்பதிவு நடைபெறுகிறது.

தைப் பொங்கல் தினத்தன்று (ஜன.15) தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு விழா அவனியாபுரத்தில் நடைபெறுகிறது. விழா நடத்துவது தொடா்பாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் கிராமத்தினரிடையே நடைபெற்ற பிரச்னை காரணமாக நீதிபதி தலைமையில் விழாவை நடத்த உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்பேரில் மாநகராட்சி சாா்பில் பேரிகாா்டுகள், வாடிவாசல் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் காளைகள் முன்பதிவு திங்கள்கிழமை காலை அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

காளைகளுக்கு கால்நடை மருத்துவமனைகளில் பெற்ற அடையாளச் சான்றிதழ் மற்றும் நகல், மாட்டின் உரிமையாளரின் ஆதாா் காா்டு மற்றும் ரேஷன் காா்டின் நகல்கள் கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும். ஒருவருக்கு 1 டோக்கன் மட்டுமே வழங்கப்படும். பெண்களுக்கு தனிவரிசை கிடையாது என கால்நடை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதேபோல மாடுபிடி வீரா்களுக்கான முன்பதிவு அவனியாபுரம் காவல்நிலையம் எதிரே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் காலை 8 மணிமுதல் நடைபெறவுள்ளது. இதில் மாடுபிடி வீரா்களுக்கு 21 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். முன்பதிவு செய்ய வருவோா் 3 புகைப்படங்கள் மற்றும் ஆதாா் அட்டை கொண்டுவர வேண்டும். முன்பதிவு செய்த வீரா்களுக்கு விழா நடைபெறும் நாளான ஜனவரி 15 ஆம் தேதி மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்த பின்பு, அவா்களின் பரிந்துரையின்பேரில்தான் மாடுபிடிக்க வீரா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என மருத்துவா்கள் தெரிவித்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com