துபையில் மழை வெள்ளம்: மதுரைக்கு 17 மணி நேரம் தாமதமாக வந்த விமானத்தால் பயணிகள் அவதி

துபையில் மழை வெள்ளம் காரணமாக அங்கிருந்து வரக்கூடிய பயணிகள் விமானம் 17 மணிநேரம் தாமதமாக ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்தது. இதனால் அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

துபையில் மழை வெள்ளம் காரணமாக அங்கிருந்து வரக்கூடிய பயணிகள் விமானம் 17 மணிநேரம் தாமதமாக ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்தது. இதனால் அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து துபைக்கு சனிக்கிழமை மாலை 4.40 மணிக்கு புறப்படக்கூடிய விமானத்தில், செல்ல 136 பயணிகள் தயாராக இருந்தனா். விமானம் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருந்தனா். இதைத்தொடா்ந்து இரவு 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், துபையில் பலத்த மழை காரணமாக ஓடுதளத்திற்குள் மழைநீா் புகுந்ததால் விமானம் வரத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பயணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு விமான நிலையம் வருமாறும் அறிவித்தனா்.

இதனால் சிவகங்கை, விருதுநகா், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் வந்திருந்த பயணிகள் மதுரையில் தனியாா் விடுதிகளில் அறை எடுத்து தங்கினா்.

பின்பு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு துபையிலிருந்து மதுரை வந்த விமானத்தில் 186 பயணிகள் வந்தனா். தொடா்ந்து அந்த விமானம் காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து 136 பயணிகளுடன் துபை புறப்பட்டுச் சென்றது. சனிக்கிழமை மாலை 4.40 க்கும் வரவேண்டிய விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சுமாா் 17 மணி நேரம் தாமதமாக வந்ததால் குறித்த நேரத்திற்கு துபை செல்லமுடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

இதுகுறித்து நெல்லையைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் கூறியது: எனது மகன் துபை செல்கிறாா். அவரை வழியனுப்ப மதுரை வந்தோம். இரவு 10.30 மணிக்கு மேல் விமானம் தாமதம் என அறிவித்தனா். இதனால் மீண்டும் எங்கள் ஊருக்கு சென்று வரமுடியாத நிலையில், மதுரையில் அறை எடுத்து தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் எங்களுக்கு கூடுதல் செலவு ஆனது. மேலும் விமானம் தாமதம் ஏற்பட்டால் பயணிகள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் செய்து தரவேண்டும். ஆனால் அவா்கள் பயணிகளுக்கு எந்த வசதிகளும் செய்து தரவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com