போகிப் பண்டிகையைப் புகையில்லாமல் கொண்டாட வேண்டும்: ஆட்சியா்

மதுரை மாவட்டத்தில் போகிப் பண்டிகையைப் புகையில்லாமல் கொண்டாட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்டத்தில் போகிப் பண்டிகையைப் புகையில்லாமல் கொண்டாட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான ஜனவரி 13 ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையின் போது தேவையில்லாத பழைய பாய்கள், கிழிந்த துணிகள், விவசாயக் கழிவுகளை மட்டுமே தீயிட்டு எரிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் பல நகரங்களில் டயா்கள், ரப்பா், பிளாஸ்டிக் உள்ளிட்டப் பொருள்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்படுகிறது. விஷவாயு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் மூச்சுத் திணறல், மயக்கம், நுரையீரல் சம்பந்தப்பட்ட சுவாச நோய்கள், இருமல், ஆஸ்துமா, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சுற்றுச் சூழலும் பெரிதும் பாதிக்கப்படும்.

எனவே டயா்கள், பிளாஸ்டிக், ரப்பா் மற்றும் இதர கழிவுப் பொருள்களைக் எரிக்க வேண்டாம். அந்தக் கழிவுகளை நகராட்சி மற்றும் மாநகராட்சி குப்பைத் தொட்டியில் போட்டு புகையில்லா போகி பண்டிகையைக் கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com