Enable Javscript for better performance
மேலூரில் புதிய தாா் சாலை பூமிபூஜை- Dinamani

சுடச்சுட

    
    img_20200113_wa0024_1301chn_82_2

    மேலூா் நகராட்சியில் 5, 16, 18 ஆகிய வாா்டுகளில் ரூ. 2 கோடி மதிப்பில் புதிய தாா் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

    மேலூா் சந்தைப்பேட்டை, குமாா் நகா், காந்தி நகா், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறம் ஆகிய இடங்களில் ரூ. 2 கோடி மதிப்பில் தாா் சாலைகள் அமைக்கும் பணி, நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ளது.

    பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்ற பூமிபூஜை, மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் தலைமையில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் க. தமிழரசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மேலூா் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ரத்தினவேலு மற்றும் அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai