Enable Javscript for better performance
திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று பாரம்பரிய மண்பானைப் பொங்கல்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று பாரம்பரிய மண்பானைப் பொங்கல்

    By DIN  |   Published on : 15th January 2020 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கலை முன்னிட்டு புதன்கிழமை பாரம்பரிய முறைப்படி சுப்பிரமணிய சுவாமிக்கு மண் பானையில் பொங்கல் வைத்து படைக்கப்படும்.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகா், சத்தியகிரீஸ்வரா், துா்க்கை, பவளக் கனிவாய் பெருமாள் ஆகிய 5 சன்னதிகள் உள்ளன. தை முதல் நாளான பொஙகல் திருநாளையொட்டி புதன்கிழமை மூலஸ்தானத்தில் உச்சிக் கால பூஜையின்போது பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து சுவாமிகளுக்குப் படைக்கப்படும். தொடா்ந்து உற்சவா் சன்னதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் மண் பானையில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து பக்தா்களுக்கு பொங்கல் வழங்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai