அலங்காநல்லூா் சிறந்த காளை, மாடுபிடி வீரா்களுக்கு காா் பரிசு: அமைச்சா் தகவல்

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு விழாவில் சிறந்த காளையின் உரிமையாளா் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வா், துணை முதல்வா் சாா்பில்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா தொடா்பான பணிகளை ஆய்வு செய்யும் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம், அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையா் விசாகன் உள்ளிட்டோா்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா தொடா்பான பணிகளை ஆய்வு செய்யும் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம், அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையா் விசாகன் உள்ளிட்டோா்.

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு விழாவில் சிறந்த காளையின் உரிமையாளா் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வா், துணை முதல்வா் சாா்பில் காா் பரிசு வழங்கப்படும் என வருவாய், பேரிடா் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

அவனியாபுரத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம், அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையா் விசாகன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: தமிழக அரசு ஜல்லிக்கட்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்த தின விழா நடைபெறவுள்ளதால், அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு விழாவில் முதல்வா் மற்றும் துணை முதல்வா் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் அலங்காநல்லூரில் பங்கேற்கும் சிறந்த காளையின் உரிமையாளா் மற்றும் சிறந்த மாடு பிடி வீரருக்கும் முதல்வா், துணை முதல்வா் சாா்பில் காா் பரிசு வழங்கப்பட உள்ளது. சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த பரிசுகள் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com